Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயிலின் அடியில் சிக்கிய பெண்…மதுரையில் பரபரப்பு

Advertiesment
ரயிலின் அடியில் சிக்கிய பெண்…மதுரையில் பரபரப்பு
, புதன், 24 ஜூலை 2019 (10:41 IST)
மதுரையில் கேரளா செல்லும் ரயிலின் அடியில் சிக்கிய பெண்ணை, ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பின்பு பத்திரமாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கொல்லம்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி விரைவு எக்ஸ்பிரஸ் இன்று காலை மதுரை ரயில் நிலையம் வந்தபோது, அந்த ரயிலில் பயணித்த பூர்ணிமா என்ற பெண் தூக்க கலக்கத்தில் நடந்து சென்று ரயிலை விட்டு இறங்கியுள்ளார். அப்போது அவர் தவறி விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கு, இடையே சிக்கி கொண்டார். தகவலறிந்த ரெயில்வே போலீஸாரும், ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்களும் அவரை மீட்க முயன்றனர். கிட்டதட்ட ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பூர்ணீமா உயிருடன் மீட்க்கப்பட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தால், அந்த வழியில் செல்ல வேண்டிய மற்ற ரயிலகள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டன. இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் மதுரை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாய்லெட்டில் சமைப்பதில் என்ன தவறு? பெண் அமைச்சரால் வெடித்தது சர்ச்சை!