Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்ற முயற்சி! – இந்து முண்ணனி நபர் கைது!

Advertiesment
Tamilnadu
, திங்கள், 20 ஜூலை 2020 (16:43 IST)
பெரியார் சிலை மீது காவி பெயிண்டை ஊற்ற இந்து முண்ணனியை சேர்ந்தவர் முயற்சித்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்த சஷ்டி கவசம் அவமதிப்பு வழக்கில் கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது தொடங்கி சமூக வலைதளங்கள் தொடங்கி பல பகுதிகளில் இறை நம்பிக்கையாளர்களுக்கும், கடவுள் மறுப்பாளர்களுக்கும் வாக்குவாதம் எழ தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் பெரியார் சிலை காவி பெயிண்ட் ஊற்றி அவமரியாதை செய்யப்பட்டதால் பல இடங்களில் பெரியார் சிலைக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவிற்கு சென்ற இந்து முண்ணனி கட்சியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அங்குள்ள பெரியார் சிலை மீது காவி பெயிண்டை ஊற்ற முயற்சித்துள்ளார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாம்பரத்தில் பேருந்துகளை கொளுத்திய போதை ஆசாமிகள்..