Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்க மனசுல இடம் பிடிச்ச புரட்சி முதல்வர் நீங்க! – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Advertiesment
எங்க மனசுல இடம் பிடிச்ச புரட்சி முதல்வர் நீங்க! – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
, திங்கள், 20 ஜூலை 2020 (14:28 IST)
பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு கலைஞரின் பெயரை சூட்டியுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மக்களுக்கான நலத்திட்டங்கள் பலவற்றை அறிவித்தார். அதில் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதி பெயரில் அவர் அறிவித்துள்ளார். இதற்கு திமுகவினர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை வாழ்த்தி வருகிறார்கள்.

சிற்றுண்டி திட்டத்திற்கு கலைஞரின் பெயர் வைக்கப்பட்டது குறித்து நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் ” கலைத் தொண்டு மூலமாக 'கலைஞர் கழகம்' வளர்த்த புதுவையில் 'புரட்சி முதல்வர்' திரு.நாராயணசாமி அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் பள்ளி மாணவர்க்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது பெருமகிழ்ச்சிக்குரியது. திமுக-வினர் மனதில் இடம்பெற்றுவிட்ட அவரது புகழ் வாழ்க!” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விளம்பரத்துக்காக பாஜக வேஷம்: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் ஜாமீன் கோரி மனு!