Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கறுப்பர் கூட்டத்தை நிரந்தரமாக முடக்க நடவடிக்கை! – யூட்யூப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம்!

Advertiesment
கறுப்பர் கூட்டத்தை நிரந்தரமாக முடக்க நடவடிக்கை! – யூட்யூப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம்!
, திங்கள், 20 ஜூலை 2020 (13:41 IST)
கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட யூட்யூப் சேனலை நிரந்தரமாக முடக்க யூட்யூப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதற்காக கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பல்வேறு சச்சரவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அரசியல் கட்சிகளும் மதரீதியான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை முழுவதுமாக முடக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சேனலை முடக்க யூட்யூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரண்பேடி எதிர்ப்பை மீறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நாராயணசாமி!!