Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயை துன்புறுத்தவும் கூடாது.. நாய்க்கடி எதிராக நடவடிக்கையும் எடுக்க வேண்டும்: நீதிமன்றம்

Mahendran
வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (10:25 IST)
சென்னையில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக, நாய்களை துன்புறுத்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. 
 
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் தனது மனுவில், சென்னை மாநகரில் சில நாய் உரிமையாளர்கள், தங்களது ஆக்ரோஷமான வெளிநாட்டு வகையை சேர்ந்த நாய்களுக்கு முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் அழைத்து செல்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால், ராட்வைலர் போன்ற நாய்கள் கடித்து சிறுவர்கள், முதியவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுபோன்ற நாய்களை தடை செய்ய வேண்டும் அல்லது முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
 
இந்த மனு மீதான விசாரணையின்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் தாக்கல் அறிக்கையில், சென்னையில் நாய் வளர்ப்பவர்கள் உரிய சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது மாநகரில் 1,80,157 நாய்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. தெருநாய்களைக் கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து நீதிபதிகள், நாய்க்கடி சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே நேரம் நாய்களை துன்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்தனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: குழந்தை திருமணங்கள் அதிகரிப்பா?

இந்த ஆண்டு இறுதிக்குள் மேட் இன் இந்தியா' சிப்கள்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

நாட்டு மக்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு.. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்: பிரதமர் மோடி

மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம்.. தவெக தலைவர் விஜய்யின் சுதந்திர தின வாழ்த்து செய்தி..!

79வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்; பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments