'நலன் காக்கும் ஸ்டாலின்' என்ற திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வழக்கறிஞர் எம். சத்யகுமார் தாக்கல் செய்த இந்த மனு, திட்டத்தின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மனுதாரர் சத்யகுமார், தனது மனுவை திரும்பப் பெற அனுமதி கோரியுள்ளார். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதை நிராகரித்தது. இதே போன்ற வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதம் செய்தார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர் எம். சத்யகுமாருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.