சமீபத்தில் தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் மாற்றப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் பெயரையும் உச்சரிப்புக்கு ஏற்ற வகையில் மாற்றுவது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள கிராமங்கள், நகரங்களின் பெயர் அதன் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறே ஆங்கிலத்திலும் உச்சரிப்பு இருக்கும் வகையில் மாற்றப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு என்பதன் உச்சரிப்பையும் Tamilnadu என்பதற்கு பதிலாக தமிழ் உச்சரிப்பில் உள்ளது போலவே Thamizh Naadu என்று மாற்ற வேண்டும் என செல்வகுமார் என்பவர் மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனு மீதான விசாரனையை மேற்கொண்ட கிளை நீதிமன்றம் தமிழ்நாடு என்பதன் பெயரை ஆங்கிலத்திலும் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றுவது குறித்து தலைமை செயலர் மற்றும் உரிய அதிகாரமுள்ளவர்கள் கலந்து ஆலோசித்து பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.