Publish Date: Mon, 25 Sep 2017 (17:47 IST)
Updated Date: Mon, 25 Sep 2017 (17:54 IST)
வடதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்குவங்க கடல் பகுதியில் ஏற்றபட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பலவேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்றுமுதல் சென்னை மேகமூடத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் நிரம்பினாலும் குறைந்த நிலத்தடி நீர் மட்டத்தின் அளவில் எவ்வித மாற்றமும் இல்லை. இதனால் சென்னை பகுதிகளில் தற்போது வரை பெய்துள்ள மழை போதாது என்ற நிலையே உள்ளது.