மத்திய பிரதேச மாநிலம் ஷாதார்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக சாலையின் ஓரத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.
அரசு அவர்களுக்கு சரியான கட்டிடம் வழங்க தவறியமையால், சாலை ஓரத்தில் திறந்த வெளியில், நிழல் கூட இல்லாமல் கல்வி கற்கும் நிலையானது மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பலத்த சத்தத்துடன் வேகமாக செல்லும் வாகனங்கள், தெருநாய்களின் அச்சுறுத்தல்களுக்கு மாணவர் பயந்தே கல்வி கற்ற வேண்டியுள்ளது.
அந்த தொடக்க பள்ளியில் 2 ஆசிரியர்கள் மற்றும் 41 மாணவர்கள் உள்ளனர். இதனால், பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் வரையில், வாடகையில் நல்ல கட்டிடம் ஏற்பாடு செய்துக் கொடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாநகராட்சிக்கு ஏற்கனவே கல்வித்துறை நிதியை ஒதுக்கி உள்ளது எனவும், பள்ளி கட்டிட ஒப்பந்தத்திற்கு யாரும் முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.