அந்தமான் அருகே கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள சில ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று சில இடங்களில் மழை பெய்து சென்னை வாசிகளை குளிர வைத்தது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தாலும் சென்னை கடுமையாக வெயில் இருந்த நிலையில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தற்போது மழை பெய்து வருகிறது.