Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (09:28 IST)
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது என்பதும் அதனால் பல பகுதிகளில் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை நிலவி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் அதிக வெப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏப்ரல் ஏழாம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தோன்ற இருப்பதால் இனி வரும் ஒரு சில நாட்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments