ராமேஸ்வரத்தில் நேற்று இரவு 3 மணி நேரம் கன மழை பெய்ததை அடுத்து ராமேஸ்வரம் கோயிலுக்குள் தண்ணீர் புகுத்து விட்டதாகவும் இதனால் பக்தர்கள் கடும் அவதிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் கன மழை பெய்ததாகவும் 3 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் கோயிலுக்குள் தண்ணீர் புகுத்து விட்டதாகவும் அந்த மழை நீரை வெளியேற்ற கோவில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் மழை நீர் கோவிலுக்குள் புகுந்து விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.