Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்'' -ஏ.ஆர்.ரஹ்மான்

Advertiesment
the kerala storey
, வியாழன், 4 மே 2023 (18:54 IST)
ஏ.ஆர்.ரஹ்மான், ''மனிதகுலத்தின் மீதான  அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

’தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தியேட்டர்களுக்கு போலீசார் தீவிர பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த திரைப்படம் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்குமே என உளவுத்துறை எச்சரித்த நிலையில் போலீசார் தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்டை மாநிலமான கேரள முதல்வர் பிரனாயி விஜயன் இந்த படத்தை எதிர்த்து குரல் கொடுத்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தி கேரளா ஸ்டோரி படம் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,.3 ஆண்டுகளுக்கு முன்பு ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில், இந்து இணையருக்கு இந்து முறைப்படி, பள்ளிவாசல், நிர்வாகத்தினர்  திருமணம் செய்து வைத்தனர்.

இந்த காணொளியை ரீடுவீட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான், மனிதகுலத்தின் மீதான  அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சிவகார்த்திகேயன் அதிர்ச்சி..!