Publish Date: Sat, 04 Dec 2021 (13:02 IST)
Updated Date: Sat, 04 Dec 2021 (13:29 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வருவதால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.