நுரையீரல் சுத்தம் செய்வது எப்படி?

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

நுரையீரல் சுத்தம் செய்வது எப்படி?

Advertiesment
நுரையீரல் சுத்தம் செய்வது  எப்படி?
, சனி, 4 டிசம்பர் 2021 (00:15 IST)
நம்மில் பலருக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு.  மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
 
இதை செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உடலிருந்து  நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். சுத்தம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது  குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். 
 
முதல் நாள்: இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும். 
 
ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான கிரேப் புரூட் சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால்  கிரேப் புரூட் சாற்றுக்கு பதிலாக பைனாப்பிள் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாக இருக்கட்டும்.
 
மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது.  கேரட் சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது. 
 
இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன்பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம்  சுத்தம் செய்ய ஒரு டானிக்காக உதவுகிறது. இது உடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாக சிறுநீர்பாதை, நுரையீரல்  தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. இதற்கு பதிலாக சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு  சாற்றை குடிக்கலாம்.
 
இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது 20 நிமிடங்கள்  உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்ற உதவும். அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறும்.
 
இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை  சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிப்பது நல்லது. 
 
மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிப்பதால் ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல  பலனை அளிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இழந்த சக்தியை மீண்டும் கிடைக்க செய்யும் தூதுவளை !!