Publish Date: Sat, 04 Dec 2021 (09:27 IST)
Updated Date: Sat, 04 Dec 2021 (10:12 IST)
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மீண்டும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆம், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவத் புயல் ஆந்திரா மாநிலம் மற்றும் ஒடிசா ஆகிய அவர்களுக்கு இடையே இன்று காலை கரையை தொட்டு அதன் பின்னர் கரையை கடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புயல் ஆந்திரா வடக்கு மற்றும் ஒடிசா நோக்கி செல்லவும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் இன்று திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் தூத்துக்குடி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.