Publish Date: Sat, 02 Sep 2023 (09:02 IST)
Updated Date: Sat, 02 Sep 2023 (09:04 IST)
கன மழை பெய்ததின் காரணமாக ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய் மகன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று ஈரோட்டில் கனமழை பெய்தது காரணமாக அங்குள்ள வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டார்.
உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஈரோட்டில் உள்ள பெரிய அக்ரஹாரம் என்ற பகுதியில் நேற்று இரவு பெய்த மழை காரணமாகத்தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது