இன்று முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
புதன், 12 நவம்பர் 2025 (14:10 IST)
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று  தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்கள்:
 
திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி
 
இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
அடுத்த சில நாட்களுக்கான முன்னறிவிப்பு:
 
நவம்பர் 13 முதல் 16 வரை லேசான மழை தொடரும். நவம்பர் 17 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உட்பட வட கடலோர மாவட்டங்கள் சிலவற்றில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராக் பஸ்வான் துணை முதல்வர்? பிகார் அரசியலில் எழுச்சி

இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கான வாய்ப்பு?

பிஹாரில் மறு வாக்குப்பதிவு இல்லாத முதல் தேர்தல் .. ஆச்சர்யமான தகவல்

தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி! - பவுனுக்கு இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் இத்தனை லடசம் ஓட்டுக்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments