வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

Mahendran
சனி, 22 நவம்பர் 2025 (14:17 IST)
தெற்கு அந்தமான் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வரும் நவம்பர் 24-ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
 
இன்று  கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
 
நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பரவலாக கனமழை தொடரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.  
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. செஞ்சுரி அடிக்க போகும் டிரம்ப்..

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments