Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்: புதிய சுகாதார செயலாளர் யார்?

Advertiesment
பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்: புதிய சுகாதார செயலாளர் யார்?
, வெள்ளி, 12 ஜூன் 2020 (11:28 IST)
பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்: புதிய சுகாதார செயலாளர் யார்?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதில் இருந்தே சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தவர் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் என்பது அனைவரும் அறிந்ததே. தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து கொரோனா வைரசுக்கு எதிரான எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிப்பார். அதேபோல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் பலியானவர்கள் குறித்த துல்லியமான தகவல்களை அளித்து வந்தார். இதனை அடுத்து அவர் தமிழகம் முழுவதும் பிரபலமாக தொடங்கியதை அடுத்து அவர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதை நிறுத்திக் கொண்டார்
 
அவருக்கு பதிலாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது சுகாதாரக் செயலாளர் பதவியில் இருந்து பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு கமர்ஷியல் டாக்ஸ் துறை செயலாளராக பதவி கிடைத்துள்ளது 
 
webdunia
பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்: புதிய சுகாதார செயலாளர் யார்?
இந்த நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளராக இருந்தார் என்பது மட்டுமின்றி தற்போது கொரோனா சிறப்பு அதிகாரியாக உள்ளார். எனவே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தற்போதைய காலகட்டத்திற்கு இவர் தான் சரியான நபர் என்று தமிழக அரசு முடிவு செய்து அவருக்கு இந்த பதவியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 மண்டலங்களில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா! – அதிர்ச்சியளிக்கும் சென்னை ரிப்போர்ட்!