புதுச்சேரி மாநிலத்தில் சாலை ஓரமாய் நிறுத்தியிருந்த அரசுப் பேருந்தை மது போதையில் இருந்தவர் இயக்கிதால் விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று மாலையில் ஒரு அரசு பேருந்து சென்னைக்கு இசிஆர் வழியாக வந்தது.
அப்போது அந்தப் பேருந்து தமிழக எல்லைப்புறப் பகுதியான கனகசெட்டிக் குளத்தில் ஓட்டுநர் நிறுத்திவைத்தார். பயணிகளும் இறங்கிவிட்டனர். பின்னர் ஓட்டுநரும் நடத்துனரும் டீ சாப்பிடுவதற்காகச் சென்றுவிட்டனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த மதுபோதையில் இருந்த ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார், அதில் சாவி இருந்ததால் தானே பஸ்ஸை ஸ்டார்ட் செய்து, ஓட்டியுள்ளார்.
இதைப் பார்த்த ஓட்டுநரும், நடத்துவரும் செய்தறியாது திகைத்து ஓடிப்போய் பேருந்தை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
இதில், 6 பைக்கிகள் மற்றும் ஆட்டோ சேதமடைந்தன. ஆட்டோ ஓட்டுநர் கடுமையாகக் காயமடைந்துள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விபத்து ஏற்படுத்திய போதை நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.