Publish Date: Sun, 15 Nov 2020 (17:58 IST)
Updated Date: Sun, 15 Nov 2020 (18:04 IST)
சேலம் மாவட்டத்தில் தம்பி முறை உள்ள சிறுவனை குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் திட்டிய அண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவருக்கு இரண்டு மகள்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்ட போதும் அவர்களின் வாரிசுகள் இருவரும் கிருஷ்ணனுடனேயே வசித்து வந்துள்ளனர். அதில் மூத்தவரான யுவராஜ் சித்தி மகனான சிறுவனை குடிப்பழக்கக்த்துக்கு அடிமையானதால் அடிக்கடி அறிவுரை கூறியும் திட்டியும் வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தீபாவளி அன்று குடித்துவிட்டு வந்த சிறுவனை யுவ்ராஜ் திட்டிக் கண்டித்துள்ளார். அதனால் சிறுவன் கோபித்துக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் இரவு வீட்டுக்கு வந்த போது வீட்டுக்கு வெளியே படுத்திருந்த யுவராஜின் மீது கல்லைப் போட்டுவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
தலையில் படுகாயமடைந்த யுவ்ராஜை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்க்க சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய அவரது தம்பியை தேடி வருகின்றனர்.