Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெரியாரை கைது செய்ய சொன்னாரா கருணாநிதி? – எச்.ராஜா ட்வீட்!

Advertiesment
பெரியாரை கைது செய்ய சொன்னாரா கருணாநிதி? – எச்.ராஜா ட்வீட்!
, வியாழன், 26 டிசம்பர் 2019 (10:53 IST)
பெரியாரை கைது செய்யாதது குறித்து திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கேள்வி கேட்டுள்ளதாக ஒரு தினசரியின் பக்கத்தை பகிர்ந்துள்ளார் எச்.ராஜா.

பெரியார் நினைவுநாள் அன்று தமிழக பாஜக அவரை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டது. இதற்கு வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அந்த பதிவு நீக்கப்பட்டது. இதற்கு ஸ்டாலின் ‘அந்த பயம் இருக்கட்டும்’ என்ற ரீதியில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் திராவிட கட்சிகளின் தோற்றத்திற்கு காரணமானவராய், திராவிட இயக்க போஸ்டர்களில் தவறாமல் இடம்பெறும் நபராய் இருக்கும் பெரியாரை திராவிட கட்சிகளின் தலைவர்களே அன்று விமர்சித்து பேசியதாய் நெடுநாளாய் கூறப்பட்டு வருவதுண்டு.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. அதில் பெரியாரை கைது செய்யாமல் இருப்பது ஏன் என கருணாநிதி பேசுவதாக உள்ளது. எச்.ராஜாவின் இந்த பதிவு அடுத்து திருவள்ளுவர் சர்ச்சை போல பெரியார் சர்ச்சையை ஏற்படுத்திவிடுமோ என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவை மக்களை ஏமாற்றிய மேகங்கள்..