நெருப்பு வளைய சூரிய கிரகணம் தற்போது தெரிய தொடங்கியுள்ளது.
30 ஆண்டுகளுக்கு பிறகு பின் நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஊட்டியில் பாதியளவு தெரிய தொடங்கியது. மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரிய ஆரம்பிக்கும். ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவிலே தெரியும் எனவும் கூறப்படுகிறது.
காரைக்குடி, சிவகங்கையில் 2 நிமிடங்களும், திண்டுக்கலில் 2 நிமிடங்கள் 50 வினாடிகளும், கோவை, ஈரோட்டில் 1 நிமிடம் 24 வினாடிகளும், மதுரையில் 2 வினாடிகள் மட்டுமே தெரியக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சென்னையில் காலை 9.34 மணியளவில் சூரிய கிரகணம் பகுதி அளவில் தெரியும் என கூறப்படுகிறது.
எனினும் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.