Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்பானிக்கு வரியில்லை அப்பத்தாலுக்கு வரியா? சில்லிதனமால இருக்கு... எச்.ராஜா காட்டம்

Advertiesment
அம்பானிக்கு வரியில்லை அப்பத்தாலுக்கு வரியா? சில்லிதனமால இருக்கு... எச்.ராஜா காட்டம்
, செவ்வாய், 23 ஜூலை 2019 (09:18 IST)
புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழகத்தில் கூறப்படும் கருத்துக்கள் அம்பானிக்கு வரியில்லை அப்பத்தாலுக்கு வரி என்பது போல உள்ளது என எச்.ராஜா தெரிவித்துள்ளார். 
 
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை பற்றி எழுந்துள்ள பல தரப்பு விமர்சனங்கள் குறித்து பேசினார். 
 
அவர் பேசியதாவது, தேசிய கல்விக் கொள்கை பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் திராவிட கழகங்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள அனைத்து இயக்கங்களும்  கல்விக் கொள்கை குறித்து பொய்யான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
webdunia
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து தவறான கருத்துக்களை கூறி தேர்தல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். இது அம்பானிக்கு வரியில்லை அப்பத்தாலுக்கு வரி என்ற பாமரத்தனமான விமர்சனம் போல் உள்ளது. 
 
அதேபோல் மும்மொழி கொள்கை என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது அல்ல. ஏற்கனவே 1986, 1992 ஆம் ஆண்டில் இருந்துள்ளது. அப்போது வராத எதிர்ப்பு இப்போது மோடி பிரதமராக உள்ளதால் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என காட்டமாக தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழிசை பதிவு செய்து உடனே டெலிட் செய்த டுவீட்! நெட்டிசன்கள் கிண்டல்