Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் தேர்வை மாணவர்களும் பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர் - தமிழிசை சவுந்தரராஜன்

நீட் தேர்வை மாணவர்களும் பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர்  - தமிழிசை சவுந்தரராஜன்
, திங்கள், 22 ஜூலை 2019 (21:06 IST)
மருத்துவ இளங்கலைப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு கட்டாயமாக நீட் தேர்வில் தேர்ச்சி  பெற வேண்டும் என்று அனைத்து மாநிலங்களிலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் , அனிதா என்ற மாணவியும் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சமீபத்தில் புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தன் எதிர்ப்பை கடுமையாக முறையில் தெரிவித்தார். இதற்கு ஆளுங்கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் இன்று சூர்யாவில் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இப்படியிருக்க,  இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில், நீட் தேர்வை பெற்றோரும், மாணவர்களும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சியை  அதிகரிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிச்சை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணை ரகசிய கேமராவில் படம் பிடித்த நபர் ! பகீர் சம்பவம்