Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அத்திவரதரை குளத்தில் வைக்க கூடாதா? ஜூயர் எச்சரிக்கைக்கு அமைச்சர் பதில்!

அத்திவரதரை குளத்தில் வைக்க கூடாதா? ஜூயர் எச்சரிக்கைக்கு அமைச்சர் பதில்!
, திங்கள், 22 ஜூலை 2019 (19:34 IST)
அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்ககூடாது என ஜீயர் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இதர்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். 
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதர், கடந்த ஜுலை 1 ஆம் தேதியிலிருந்து பக்தர்களுக்கு காட்சித் தந்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து போகின்றனர். 
 
மேலும் ஆகஸ்டு 17 வரை பக்தர்களுக்கு காட்சித் தரவுள்ள அத்திவரதர், அதன்பிறகு வழக்கம்போல் குளத்துக்குள் தஞ்சம் அடைகிறார். 40 வருடங்களுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு இவ்வாறு காட்சித் தந்து வருகிறார் அத்திவரதர். 
webdunia
இந்நிலையில் அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்ககூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார். 
 
இது குறித்து ஜீயர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக அத்திவரதரை பூமிக்குள் வைத்தனர். ஆனால் அதற்கான தேவை தற்போது இல்லை என்பதால் அத்திவரதரை பூமிக்குள் வைக்க அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரனிடம் கேட்ட போது அதற்கு அவர் முன்பு காலங்களில் ஆகம் விதிப்படி எந்த நடைமுறை பின்பற்றப்படதோ அந்த வழிமுறையே தற்போது பின்பற்றப்படும் என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேடையிலேயே இறந்த காமெடி நடிகர் – இதுவும் நடிப்பு என்று நினைத்த ரசிகர்கள்