Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுதான் உண்மையான தீபாவளி பரிசு! – ஹாப்பியான எச்.ராஜா!

Advertiesment
இதுதான் உண்மையான தீபாவளி பரிசு! – ஹாப்பியான எச்.ராஜா!
, வியாழன், 24 அக்டோபர் 2019 (13:02 IST)
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்து வரும் நிலையில் மக்களுக்கு நன்றி சொல்லி நூதனமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் எச்.ராஜா.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணனும், விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னனியில் உள்ளனர்.

இதனால் இப்போதே அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த தேர்தலில் பாஜகவும், அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ” இடைத்தேர்தல் முடிவுகள் இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”2021 எலெக்‌ஷன்லயும் நாங்கதான்”: கெத்து காட்டும் ஜெயகுமார்