Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”சென்னைதான் பொண்ணுங்களுக்கு சேஃப்”..

Advertiesment
”சென்னைதான் பொண்ணுங்களுக்கு சேஃப்”..

Arun Prasath

, வியாழன், 24 அக்டோபர் 2019 (11:29 IST)
நாட்டிலேயே சென்னை தான் பெண்களுக்கு எதிராகவும் பட்டியலினத்தவர்களுக்கு எதிராகவும் உள்ள குற்றங்கள் மிக குறைவான எண்ணிக்கையில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 முதல் 2017 ஆம் ஆண்டுகளுக்கான குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது. இதில், சென்னை தான் பெண்களுக்கு எதிராகவும், பட்டியலினத்தவர்/பழங்குடியினர் எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் மிக குறைவான எண்ணிக்கையில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் இந்தியாவில் சென்னையில் தான் பொருளாதார குற்றங்கள் மிகவும் குறைந்த அளவில் உள்ளதாகவும், கணிணி வழி குற்றங்களும் குறைந்த அளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் சென்னை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்ட பிரிவின் கீழான குற்றங்களில் ஹைதராபாத்திற்கு அடுத்த இடத்தில் சென்னை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலங்காதே தம்பி கலங்காதே... விஜய்க்கு சீமான் ஆறுதல்!!