விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் என்ற தொகுதியிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இதில் வாக்கு எண்ணிக்கை துவங்கிய ஒரு மணி நேரத்தில் புதுவை காமராஜ் தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட்குள்ளது. ஆம், காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14782 வாக்குகள் பெற்றுள்ளார். என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7611 வாக்குகள் பெற்றுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு தொகுதிக்கான முடிவு வெளியான் நிலையில் விக்கிரவாண்டு மற்றும் நாங்குநேரி தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக விக்கிரவாண்டியில் அதிமுகவும், நாங்குநேரியில் திமுக கூட்டணி காங்கிரஸும் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது இரண்டு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்துடன் அதிமுக முன்னிலையில் உள்ளது.
ஆம், நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளனர். திமுக வேட்பாளர்கள் பின்னடவை சந்தித்துள்ளனர்.