Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரமக்குடியில் விநாயகர் சிலைகள் பறிமுதல்! – எச்.ராஜா கண்டனம்!

பரமக்குடியில் விநாயகர் சிலைகள் பறிமுதல்! – எச்.ராஜா கண்டனம்!
, புதன், 19 ஆகஸ்ட் 2020 (15:13 IST)
பரமக்குடியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகளை காவல் அதிகாரிகள் பறிமுதல் செய்ததற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் எளிமையாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் உத்தரவை மீறி சிலை வைப்பவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரை அருகே பரமக்குடியில் விற்பனைக்காக விநாயகர் சிலைகளை கொண்டு சென்ற வாகனத்தை காவல்த்துறையினர் பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்து விநாயகர் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. அவை வீடுகளில் வைத்து வழிபட கொண்டு செல்லப்பட்ட சிலைகள் என தெரிவித்துள்ள பாஜக மாநில தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வந்த இடங்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது நாங்க குடுத்த விண்ணப்பமே இல்ல! – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!