Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆத்தி... அமைச்சர் ஜெயக்குமாரா இது! வைரலாகும் பள்ளி பருவ புகைப்படம்!

Advertiesment
ஆத்தி...  அமைச்சர் ஜெயக்குமாரா இது! வைரலாகும் பள்ளி பருவ புகைப்படம்!
, புதன், 19 ஆகஸ்ட் 2020 (13:33 IST)
தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் ஜெயக்குமார் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இராயபுரம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முன்னதாக இதே தொகுதியிலிருந்து, 1991, 2001, 2006, மற்றும் 2011 தேர்தல்களில் வெற்றி பெற்றார். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றி உள்ள இவர் செப்டம்பர் 29, 2012 வரை தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராக செயல்பட்டார். செப்டம்பர் 29, 2012 அன்று பேரவை தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவராக இருந்து வந்த இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை அறிவியலும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் படித்துளளார்.

இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவலென்னவென்றால்,  " தனது ட்விட்டர் பக்கத்தில் பள்ளி பருவத்தின் போது  உடற்பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படமொன்றை வெளியிட்டு "பள்ளியில் பலு தூக்கும் போட்டியில் பங்கு கொண்டபோது... #நினைவுகள் #உடல்பலமேமனபலம்" என குறிப்பிட்டு வெளியிட நம்ம அமைச்சரா இது என ஷாக் ஆகி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை! – மு.க.ஸ்டாலின் வருத்தம்!