Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பண மதிப்பு ரூ.74 அளவுக்கு சரிவடைந்தது : வாயை விட்டு மாட்டிக்கொண்ட ஹெச்.ராஜா

பண மதிப்பு ரூ.74 அளவுக்கு சரிவடைந்தது : வாயை விட்டு மாட்டிக்கொண்ட ஹெச்.ராஜா
, வெள்ளி, 29 ஜூன் 2018 (15:56 IST)
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பண மதிப்பு ரூ.74 அளவுக்கு குறைந்தது எனக் கூறி நெட்டிசன்களிடம் ஹெச்.ராஜா வசமாக சிக்கியுள்ளார்.

 
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கும் கருத்துகள் எப்போதும் சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டே இருக்கிறது.
 
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத நிலையில் ரூ.69 நேற்று சரிந்தது. இதற்கு முன்பு பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்த சில நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.68.65 ஆக சரிந்ததுதான் அதிகபட்ச சரிவாக இருந்தது.
 
எனவே, இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் “இந்திய பணத்தின் சரிவு இந்திய பொருளாதார நிலையை  எதிரொலிக்கிறது. இதை யாராலும் மறைக்க முடியாது” என அவர் பதிட்டிருந்தார்.
webdunia

 
அதற்கு பதில் கொடுத்த ஹெச்.ராஜா “ மிஸ்டர் யெச்சூரி, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்திய பணத்தின் மதிப்பு ரூ.74 ஆக சரிவடைந்ததை மறக்கக் கூடாது” என டிவிட் செய்திருந்தார்.
 
இந்திய பணத்தின் மதிப்பு ரூ.69 என்பது அதிக பட்ச சரிவு என அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், ஹெச்.ராஜா இப்படி கூறியதால் நெட்டிசன்கள் வழக்கம்போல் அவரை வைத்து செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் பெண் ஷெபானி அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனானது எப்படி?