Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லாம் லோக்சபா தேர்தல் வரைதான்; கேள்விக்குறியாகி உள்ள கூட்டணி

Advertiesment
எல்லாம் லோக்சபா தேர்தல் வரைதான்; கேள்விக்குறியாகி உள்ள கூட்டணி
, வெள்ளி, 29 ஜூன் 2018 (15:23 IST)
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜக கூட்டணி லோக்சபா தேர்தலுக்கு பின் உடையும் என்றும் இதனால் ஆட்சி கவிழும் என்றும் கூறப்படுகிறது.

 
கர்நாடாகவில் பாஜக முன்னிலை பெற்றாலும் போதிய பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் - மஜக கூட்டணி பெரிய போராட்டத்துக்கு பின் ஆட்சியமைத்தது. இதைத்தொடர்ந்து மஜக கட்சியின் முதல்வர் வேட்பாளர் குமாரசாமி கர்நாடகா மாநில முதல்வராக பதவியேற்றார்.
 
சித்தராமையாவுக்கும் மஜத தேசிய தலைவர் தேவகவுடாவுக்கும் இடையே பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் - மஜக கூட்டணி விரைவில் உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தனது ஆதரவாளர்களுக்கு வாரியங்கள், கழகங்களில் தலைவர் பதவி தரப்பட வேண்டும், அமைச்சர் பதவியில் கூடுதல் இடங்கள் வேண்டும் என்று சித்தராமையா லாபி செய்வதாக கூறப்படுகிறது.
 
இதனால் லோக்சபா தேர்தலுடன் இந்த கூட்டணி ஆட்சி முடிவு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிவிட்டதே: சுவிஸ் வங்கியில் உயர்ந்தது கருப்பு பண பதுக்கல்!