நடிகர் சங்க நிலம் கையாடல்: சரத்குமார், ராதாரவி மீது வழக்குப் பதிவு!

வெள்ளி, 29 ஜூன் 2018 (15:15 IST)
நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றதாக நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
1986ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக ராதாரவி இருந்த காலத்தில், காஞ்சிரம் மாவட்டம் வேங்கட மங்கலத்தில் நடிகர் சங்கம் சார்பில் 29 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. இதனை கடந்த 2006 ஆம் ஆண்டு, நடிகர் சங்கத் தலைவராக இருந்த சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர் முறைகேடாக விற்பனை செய்து, அதில் வந்த பணத்தை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலாளர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த  நீதிபதி, புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
 
இந்நிலையில், முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததால் ராதாரவி, சரத்குமார் , எம்.என்.கே.நடேசன் , செல்வராஜ் ஆகிய நான்கு பேர் மீது, ஐ.பி.சி 465, 468, 471, 420 ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பாலாஜியை நேரடியாக தாக்கும் நித்யா: 2வது ப்ரோமோ வீடியோ