கிண்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் : கடுமையாக போக்குவரத்து பாதிப்பு !

வியாழன், 7 நவம்பர் 2019 (21:35 IST)
சென்னை கிண்டி அருகே ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையம் அருகே ஒரு கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை கிண்டி அருகே ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையம் அருகே ஒரு கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அங்கு வந்து தீணை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
மேலும் காரில் எரிந்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் சாலை முழுவதும் நுரை தேங்கிக் காணப்பட்டது. அதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
 
தொடர்ந்து 15 நிமிடம் அடையாளம் தெரியாத கார் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் உணவு வீணாவதை குறைக்க ஏழு வழிகள்: வீட்டில் செய்வது முதல் பொருட்களை வாங்குவது வரை