சென்னை கிண்டியில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதால் இளைஞர்கள் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
	இந்த வேலைவாய்ப்பு முகாமில் 500 க்கும் மேற்பட்டோர் தேர்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
	 
 
 			
 
 			
					
			        							
								
																	
	சென்னையில் இருக்கும் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள இருக்கின்றன.
	 
	நாளை காலை சரியாக 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை இந்த முகாம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
	 
	படிப்புத் தகுதியாக  8 ஆம் வகுப்பில் தேர்ச்சியடைந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை இதில் கலந்து கொள்ளலாம்.
	 
	தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் நிர்மலாசாமி இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.