Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்துக்கு சம்மதிக்காத தாய் : ஆத்திரத்தில் கொலை செய்த வாலிபரால் பரபரப்பு

Advertiesment
திருமணத்துக்கு சம்மதிக்காத தாய் : ஆத்திரத்தில் கொலை செய்த வாலிபரால் பரபரப்பு
, சனி, 2 மார்ச் 2019 (10:07 IST)
சென்னை கிண்டி நரசிங்கபுரம் 4 வது தெருவில் வசித்து வந்தவர் ரேவதி ( 45). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார். எனவே தன் இரு மகள்களுடன் வசித்து வந்தார். அவர் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவரது  மூத்த மகளுக்கும்(20) கிண்டி மசூதி காலனியை சேர்ந்த கார் டிரிவரான வினோத் (27) என்பவருக்கும் கடந்த ஒரு ஒருவருடத்துக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
 
ஆனால் சில காரணங்களால் ரேவதி தன் மகளை வினோத்துக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து வினோத் ரேவதியிடம் அவரது மகளை தனக்கு திருமண செய்தி கொடுக்க சொல்லி வற்புறுத்தி வந்தார்.ஆனால் ரேவதி இதற்கு சம்மதிக்கவில்லை.
 
இவரது தொந்தரவால் தன் மகளை உறவினர்  வீட்டுக்கு அனுப்பி வைத்தார் ரேவதி. 
ரேவதியின் மகளைக் காணாமல் வினோத் தவித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வேலைமுடித்து வீட்டுக்கு திரும்பிய ரேவதியை மறித்த வினோத் தன் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு அவரது மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தினார்.
 
ஆனால் ரேவதி மீண்டும் மறுக்கவே! தன் கையில் இருந்த கத்தியால் ரேவதியை சரமாரியாக குத்திவிட்டு நண்பர்கடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 
 
இதில் படுகாயமடைந்து வலியால் துடித்த ரேவதி சம்வவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
 
இந்த சம்பவம் அப்பகுதியில் அப்பகுதியில் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இக்கொலையில் ஈடுபட்ட வினோத் மற்றும் அவனது நண்பர்களை போலீஸார் தேடி வருவதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு தூங்கி விழுந்த மக்கள் : வைரலாகும் வீடியோ