ஆளுனருக்கு ஆய்வு நடத்தும் அதிகாரம் கிடையாது: ப.சிதம்பரம்

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (09:25 IST)
ஏற்கனவே புதுவையில் ஆளுனர் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக அம்மாநில முதல்வர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தமிழகத்திலும் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் கடந்த சில வாரங்களாக ஆய்வு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

புதுவையிலாவது ஆளும்கட்சி ஆளுனரின் ஆய்வை எதிர்த்து குரல் கொடுக்கின்றது. ஆனால் தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு ஆளுனரின் ஆய்வை கண்டுகொள்ளாமல் இருப்பது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆளுநரின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது, ஆளுநர் தலைவராக இருக்கலாம், ஆனால் அவருக்கு ஆய்வு நடத்தும் அதிகாரம் கிடையாது.

மத்திய அரசுக்கு பயந்து தமிழக அரசு, ஆளுநரின் ஆய்வை அனுமதிக்கிறது. ஆளுநரின் ஆலோசனை கூட்டத்தை, மாவட்ட அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். ப.சிதம்பரம் அவர்களின் ஆலோசனையை மாவட்ட அதிகாரிகள் கேட்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments