மும்பையை சேர்ந்த ஸ்வேதா சிங் என்பவரின் 4வயது மகள் இடதுகை பழக்கம் உள்ளவர். இவர் படம் வரையும்போது பென்சிலை சீவும்போது ஷார்ப்னரை உபயோகிக்க மிகுந்த சிரமப்படுவார். ஏனெனில் ஷார்ப்னர் வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு வசதியாக தயாரிக்கப்பட்டிருக்கும்
தனது அன்புமகள் சிரமப்படுவதை பார்த்து பொறுக்க முடியாத ஸ்வேதாசிங் உடனே இந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தனது அன்புமகளின் சிரமத்தை போக்கும் வகையில் இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்காக ஸ்பெஷல் ஷார்ப்னர் தயாரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்
அந்த தாயின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இந்துஸ்தான் நிறுவனம், அவரது 4வயது சிறுமிக்காக இடதுகை பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் ஐந்து ஷார்ப்னர்களை தயார் செய்து அனுப்பியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த தாய் தனது ஃபேஸ்புக்கில் இந்துஸ்தான் நிறுவனத்திற்கு நன்றி கூறியுள்ளார். அவருடைய பேஸ்புக் பதிவை பார்த்து ஆயிரக்கணக்கானோர் அந்த நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.