Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாத்ரூம் கவர்னர் என கிண்டலடித்த விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எச்.ராஜா

Advertiesment
பாத்ரூம் கவர்னர் என கிண்டலடித்த விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எச்.ராஜா
, சனி, 16 டிசம்பர் 2017 (18:29 IST)
நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கடலூரில் ஆய்வு செய்தபோது இளம்பெண் ஒருவர் குளிப்பதை எட்டி பார்த்ததாக ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதில் ஒரு படி மேலே போய் விகடன் ஊடகம் ஒரு காமெடி வீடியோ ஒன்றை இதுகுறித்து வெளியிட்டுள்ளது.

விகடன் பதிவு செய்துள்ள இந்த வீடியோ டுவீட்டில் 'பாத்ரூம் கவர்னர்' என்று ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளது. அந்த ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியபோது, 'பிரஸ் கவுன்சில் உடனடியாக விகடன குழுமத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விகடன் குழுமம் நாகரீக எல்லைகளைக் கடந்து மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறது. ஆளுநர் பற்றி விகடன் பறப்பிய அவதூறு செய்தி உள்நோக்கம் கொண்டது. வன்மையாக கண்டிக்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா, இந்தோனேசியாவிற்கு சுனாமி ஆபத்து: ஜோதிடர் கணிப்பு!