Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பசங்க பாக்ஸ் கட்டிங் கேட்டா.. போடாதீங்க! – சலூன் கடைகளுக்கு வேண்டுகோள் விடுத்த அரசு பள்ளி!

Letter
, செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (09:24 IST)
பள்ளி மாணவர்களுக்கு ஸ்டைலாக முடிவெட்டுவது தொடர்பாக அரசு பள்ளி ஒன்று சலூன் கடைகளுக்கு அனுப்பிய வேண்டுகோள் கடிதம் கவனம் ஈர்த்துள்ளது.

காலத்திற்கு ஏற்ப இளைஞர்களின் பழக்க வழக்கங்களும் மாறி வரும் நிலையில் சமீபத்திய பள்ளி மாணவர்கள் விதம் விதமாக முடி வெட்டுக் கொள்ளுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல பள்ளிகளில் மாணவர்கள் ஒரு பக்கம் மட்டும் முழுமையாக முடியை வெட்டி மறுபக்கம் அப்படியே விட்டு விடுதல் போன்ற வித்தியாசமான ஸ்டைலில் முடிவெட்டி செல்கின்றனர்.

மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பல அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, அப்பகுதியில் உள்ள அனைத்து சலூன் கடைகளுக்கும் வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்களுக்கு பாக்ஸ் கட்டிங், கோடு போடுதல்  ஒன் சைட், வி கட்டிங், ஸ்பைக் போன்றவற்றை தவிர்த்து மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும் வகையில் சிகையலங்காரம் செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியூசிலாந்தை புரட்டி போட்ட ‘கேப்ரியல்’ புயல்! – அவசரநிலை பிரகடனம்!