அரசு நிலம் ஆக்கிரமிப்பு....ஜமாபந்தியில் மனு அளித்தபின் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர்
, புதன், 18 மே 2022 (23:11 IST)
ஆம்பூர் அருகே அரசுக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்கக்கோரி 9 ஆண்டுகளாக ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை- பத்தாவது முறையாக மனு அளித்துள்ளோம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம்ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மனு அளித்தபின் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் சங்கரன் பேட்டி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1431 வது பசலி ஆண்டு ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஜமாபந்தி அலுவலகம் மாவட்ட ஆட்சியருமான அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது இதில் ஆம்பூர் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வீட்டுமனை, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர் இந்த மனு மீதான விசாரணை மற்றும் இந்த ஆண்டிற்கான வருவாய் கணக்கு பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் சரிபார்த்து நடவடிக்கை மேற்கொண்டார் அப்போது மின்னூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் அரசுக்கு சொந்தமான 3.5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் அரசு இஜிரா கணக்கில் உள்ள தென்னை மரங்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டு வீடில்லா ஏழைகளுக்கு கொடுக்குமாறு மின்னூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளருமான சங்கரன் என்பவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி நிகழ்ச்சியின்போது ஒவ்வொரு ஆண்டும் மனு அளித்து வந்ததாகவும் இது சம்பந்தமாக வருவாய்த்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆன்லைன் மூலம் முதல்வர் தனிபிரிவிக்கும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த அவர் 10 வது முறையாக தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்டு வீடில்லா ஏழைகளுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்துள்ளோம் இதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார் நிகழ்ச்சியின்போது ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் சசிகலா, வட்டாட்சியர் பழனி, தனி வட்டாட்சியர் பத்மநாபன்,மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சாந்தகுமார், பேர்ணாம்பட்டு ஒன்றிய தலைவர் சங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்
அடுத்த கட்டுரையில்