ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவு திடலில் அரசு பொருட்காட்சி நடைபெறும் நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பொருட்காட்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவு திடலில் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டும் கடந்த டிசம்பர் மாதம் பொருள்காட்சிக்கான பணிகள் தொடங்கப்பட்டது.
ஆனால் மழை காரணமாக ஸ்டால்கள் அமைக்கும் பணி தாமதமான நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டதை அடுத்து மீண்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த ஆண்டு பொருட்காட்சிக்கான நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு 40 ரூபாய், சிறுவர்களுக்கு 25 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பொருள்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், தொடக்க விழாவில் அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், சேகர்பாபு, ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.