Publish Date: Wed, 24 Jun 2020 (17:37 IST)
Updated Date: Wed, 24 Jun 2020 (19:34 IST)
தமிழகத்தில் கொரொனா வேகமாகப்பரவி வருகிறது., இதைத்தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், வரும் 30 ஆம் தேதி தளர்வுகளுடன் பொது ஊடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டக்களை அடுத்து, மதுரையிலும் பொது ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியிருந்த நிலையில், இறப்பும், விமானம், ரயில் போன்ற முக்கிய சேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் எனவும், வாகனங்களில் செல்லகூடாது என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுத்த மாநகராட்சி ஊழியர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் தலைமைச் செயலக ஊழியர் உட்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.