Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது: ராஜினாமா செய்கிறாரா கவர்னர் ரவி?

Advertiesment
governor

Mahendran

, வெள்ளி, 22 மார்ச் 2024 (11:42 IST)
பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கூறிய கவர்னர் ரவி இன்று ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனதை அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு வழக்கில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி தமிழக கவர்னருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பிய கவர்னர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்ற குறிப்பிட்டிருந்தார். இதனை எதிர்த்து திமுக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கவர்னருக்கு கடும்  கண்டனம் தெரிவித்தார்.

முதல்வர் குறிப்பிடுபவரை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தான் கவர்னர் வேலை என்றும் 24 மணி நேரத்தில் அவர் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் கெடு விதித்திருந்தார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் முன் வரவில்லை என்றும் அதனால் அவர் பதவி விலகுவது குறித்து ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது  

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலாகா இல்லாத முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார்: ஆம் ஆத்மி அறிவிப்பு