Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எவ்வாறு பதவிப்பிரமானம் செய்ய முடியாது என கூற முடியும்?- ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

rn ravi

Sinoj

, வியாழன், 21 மார்ச் 2024 (15:00 IST)
பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியின் முடிவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் பொன்முடி மேல்முறையீடு வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அவர் மீண்டும் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் ஆவதற்கு தடை இல்லை என்று கூறப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து சமீபத்தில்  தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பொன்முடிக்கு அமைச்சர் பதவி செய்து வைக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
 
இதற்கு தமிழ்நாடு  ஆளுநர் தரப்பிலிருந்து முடியாது என்று பதில் கடிதம் வந்தது.
 
இந்த விவகாரம் தொடர்பாக  தமிழ்நாடு அரசின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம்  தடைவிதித்த பிறகும், பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? என்று உச்ச நிதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
 
 நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது என கூற முடியும்? ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
 
மேலும், தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமானம் செய்துவைக்க முடியாது என்று கூறியது அவருடைய வேலை அல்ல என்று கண்டனம் தெரிவித்து, நாளைக்குள் முடிவெடுக்க அவருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
 
எனவே விரைவில் பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமானம் செய்து வைப்பார் என தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் போட்டியா? பாஜகவுக்கு ஆதரவு மட்டுமா? ஓபிஎஸ் நாளை முடிவு