பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்த தமிழக ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மேல்முறையீட்டு மனு விசாரணையின் போது சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
இதனை அடுத்து அவரது எம்எல்ஏ பதவி பறி போகவில்லை என்பதால் மீண்டும் அவர் அமைச்சராக பதவியை ஏற்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், கவர்னர் ரவிக்கு எழுதிய கடிதத்தில் பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் கவர்னர் தரப்பிலிருந்து வந்த பதில் கடிதத்தில் பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்றும் அவர் நிரபராதி என்று இன்னும் நிரூபணம் ஆகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்த கவர்னர் மீது உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு விரைவில் விசாரணை வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.