Publish Date: Sat, 07 Jan 2023 (10:45 IST)
Updated Date: Sat, 07 Jan 2023 (10:46 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.41,768க்கு விற்பனை.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.41,768க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ரூ.5,221க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.74.40க்கு விற்பனையாகிறது.