Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டம்: கமல்ஹாசன்

Advertiesment
jallikattu
, வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:11 IST)
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்காக அனுமதிக்கு விண்ணப்பம் செய்திருப்பதாகவும் உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதன் நினைவாக மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று அனுமதி கோரி உள்ளோம் என்றும் விரைவில் எங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றும் கமலஹாசன் கூறியுள்ளார். 
 
சமீபத்தில் டெல்லியில் ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டதை அடுத்து அவர் விரைவில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பாளர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.20 கோடிக்கு நாய் வாங்கிய பெங்களூரு தொழிலதிபர்!